ரம்யா பாண்டியனா இது? எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு வளர்ந்திருக்காங்க பாருங்க!

Webdunia
திங்கள், 2 நவம்பர் 2020 (13:54 IST)
கடந்த சில மாதங்களாக சமூகவலைதளங்களில் விதவிதமாக சேலை அணிந்து புகைப்படங்களை பதிவேற்றி இளைஞர்களின் மனதில் இடம்பிடித்த ரம்யா பாண்டியன் சின்னத்திரையில் அடியெடுத்து வைக்கிறார். ஜோக்கர் படத்தின் மூலம் தமிழ சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ரம்யா பாண்டியன் .

அதன் பின்னர் வந்த ஆண் தேவதைப் படத்துக்குப் பிறகு வேறெந்த பட வாய்ப்பும் இல்லாமல் போராடி வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சமூகவலைதளங்களில் விதவிதமாக புடவைகளை அணிந்து புகைப்படங்களை பதிவேற்றி இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தார். ஆனாலும் அவருக்கு எந்த பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.

இதையடுத்து இப்போது விஜய் டிவியின் குக் வித் கோமாளிஸ் என்ற சமையல் சம்மந்தமான ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்துகொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சி இவரை மேலும் பிரபலமாக்கியது. தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்களின் மனதில் ஆழமான இடத்தினை பிடித்துள்ளார். இந்நிலையில் தற்போது சூப்பர் சிங்கர் புகழ் பிரபல பாடகி ஸ்ரீ நிஷா பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவரை வரவேற்ற ரம்யா பாண்டியனின் வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. ரம்யா கல்லூரி படித்துக்கொண்டிருந்த போது பேசிய இந்த வீடியோ தற்ப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்