அந்தவகையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் கூலாக பாப்கார்ன் சாப்பிட்டுக்கொண்டே வந்த கமல் போனவாரம் தான் கேட்டாங்க தியேட்டர் துறந்துட்டாங்களான்னு? ஆனால், இது ஒன்னும் கொறச்சல் இல்ல. படத்துக்கு தேவையான அத்தனை அம்சங்களும் பக்கவா பொருந்தியிருக்கு.
கொஞ்சம் வீரம் இருக்கு , மலர்ந்தும் மலராத காதல் இருக்கு, அம்மா புள்ள செண்டிமெண்ட் நிறைய இருக்கு, பாசம் சும்மா பொங்கிடுச்சுங்க. கூடவே கொஞ்சம் அரசியலும் இருந்தது கவனிச்சிங்களா? அரசியலுக்கு தான் மேடை வேணும் நின்னு பேசணும் என்று அனிதா சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.
அதையடுத்து இரண்டாவது ப்ரோமோவில் அனிதாவின் சுமங்கலி விவகாரம் குறித்து கமல் வீட்டில் உள்ள அனைவரிடமும் கருத்து கேட்கிறார். அதில் அர்ச்சனா வழக்கம் போலவே எதிர்மறையாக கருத்து தெரிவித்து பல்ப் வாங்கிக்கொண்டார். பின்னர் அனிதாவிடம் கமல் கேட்டதற்கு, "இப்பவும் நான் அதை மாற்றிக்கொள்ளமாட்டேன். நான் சரியாக பேசியதாக தான் நினைக்கிறன் என தனது கருத்தை அழுத்தமாக பதிவிட்டு கமலின் கை தட்டலுக்கும் பாராட்டுக்கும் ஆளாகினார்.
தொடர்ந்து சற்றுமுன் வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், அர்ச்சனா மற்றும் பாலாஜிக்கு இடையே நடந்த சண்டை , வாக்குவாதம் , பாசம், அம்மா பையன் உறவு உள்ளிட்டவரை குறித்து பேசினார். பின்னர் ரியோவின் மீடியா குரூப்பிஸம் எண்ணத்தை குறித்து பேச்செடுத்த கமல், நம்முடைய டீம் அதுக்காக தொடையை நக்கனும்னு இருந்த ரியோவுக்கு எப்படி இருந்தது என கேட்டு சங்கத்திற்கு ஆளாக்கி சாதுர்யமாக பேசி முடித்தார். கமல் சார், நம்ம ஆரி மாதிரி எதுவா இருந்தாலும் நேரடியா பட் பட்டுன்னு கேளுங்க. சும்மா சுத்தி வளச்சு கேம் ஆடாதீங்க என ஆடியன்ஸ் ஆதங்கப்பட்டுள்ளனர்.