இன்ஸ்டாகிராமில் ஒரு பொருளை விளம்பரப்படுத்த ரம்யா பாண்டியன் கேட்ட தொகை அதிர்ச்சியளிக்க வைத்துள்ளதாம்.
ஜோக்கர் படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானாலும் போதுமான வாய்ப்புகள் கிடைக்காததால் சமூகவலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் ரம்யா பாண்டியன். அதில் ரசிகர்கள் கிறங்கி போக பார்த்த விஜய் டிவி தங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவரை தூக்கி போட்டு விஜய் டிவியின் செட் பிராப்பர்ட்டியாக்கியது.
இதையடுத்து அவர் பிக்பாஸ் சீசன் 4 ல் போட்டியாளராக கலந்துகொண்டார். ஆனாலும் அவருக்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனாலும் அவர் இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களில் இன்னமும் பிரபலமாக சுற்றி வருகிறார். அவரை கிட்டத்தட்ட 21 லட்சம் பேர் பாலோ செய்கிறார்கள்.
இந்நிலையில் அவரை ஒரு நிறுவனம் அனுகி தங்கள் பொருளை விளம்பர படுத்தும் விதமாக ஸ்டோரி வைக்க சொல்ல, அதற்கு அவர் 10 லட்சம் கட்டணமாகக் கேட்டுள்ளாராம். இதைக்கேட்டு அந்த நிறுவனம் அதிர்ச்சியில் எந்த பதிலும் சொல்லாமல் சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது.