விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென விஷால் மற்றும் மிஷ்கின் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மிஷ்கின் படத்தில் இருந்து விலகினார். லண்டனில் நடந்த படப்பிடிப்பில் இருவருக்கும் இடையே எழுந்த கருத்து வேறுபாட்டால் லண்டனில் இருந்து தமிழகம் வந்தார் மிஷ்கின். மீதமிருந்த காட்சிகளை விஷாலே படமாக்கி முடித்து திரும்பினார். ஒரு கட்டத்தில் கருத்து வேற்ய்பாடு அதிகமான நிலைய்ல் படத்தில் இருந்து மிஷ்கின் விலகினார். மேற்கொண்டு படத்தை விஷாலே இயக்குவார் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இப்போது அந்த படத்தை மீண்டும் தொடங்கலாம் என நினைத்த விஷால் படத்தின் ஏற்கனவே எடுக்கப்பட்ட காட்சிகளை போட்டுப் பார்த்துள்ளார். ஆனால் மிஷ்கின் எடுத்த காட்சிகளுக்கும் தான் எடுத்த காட்சிகளுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருப்பதால் கடும் அப்செட்டில் இருக்கிறாராம். இதனால் அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்ற யோசனையில் உள்ளாராம்.