ரஜினி ஊர்ல இல்ல.. யாரும் வராதீங்க! – ஏமாற்றத்தில் ரஜினி ரசிகர்கள்!

Webdunia
திங்கள், 12 டிசம்பர் 2022 (11:18 IST)
ரஜினி பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் ரஜினி அவரது வீட்டில் இல்லாதது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் இன்று அவரது ரசிகர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரஜினிகாந்தின் ‘பாபா’ படம் மீண்டும்  ரிலீஸாகியுள்ள நிலையில் பலரும் இன்று அதை பார்த்து அவரது பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.

வழக்கமாக ஆண்டுதோறும் ரஜினி பிறந்தநாளில் போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு செல்லும் ரசிகர்கள் அங்கு ரஜினிகாந்தை சந்திப்பது வழக்கம். இந்த பிறந்தநாளிலும் ரஜினிகாந்தை காண காலை முதலே போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டின் முன் ரசிகர்கள் குவிய தொடங்கினர்.

ரஜினியை காண அவலோடு அவர்கள் காத்திருந்த நிலையில் ரஜினிகாந்த் ஊரிலேயே இல்லை என்றும், அவருக்காக காத்திருக்க வேண்டாம் என்று லதா ரஜினிகாந்த் ரசிகர்களிடம் கூறியுள்ளார். இதனால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் அங்கிருந்து அகன்றுள்ளனர். சிலர் சிறிது நேரம் ரஜினியை பார்த்தே ஆவோம் என காத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்