தலைவா எங்களுக்காக இதை செய்ங்க ப்ளீஸ்! – ரசிகர்கள் கோரிக்கை!

திங்கள், 12 டிசம்பர் 2022 (09:18 IST)
இன்று நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் அவர் வீட்டின் முன் குவிந்த ரசிகர்கள் அவருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் இன்று அவரது ரசிகர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரஜினிகாந்தின் ‘பாபா’ படம் மீண்டும்  ரிலீஸாகியுள்ள நிலையில் பலரும் இன்று அதை பார்த்து அவரது பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.

மேலும் பலர் கேக் வெட்டியும், இனிப்பு வழங்கியும் ரஜினிகாந்த் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அவரது போயஸ் கார்டன் வீட்டின் முன்பு இன்று நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டி கொண்டாடினர். ரஜினிகாந்த் ரசிகர்களுடனான சந்திப்பை நிறுத்தி பல காலம் ஆகிவிட்ட நிலையில் அவர் மீண்டும் ரசிகர்களை சந்திக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Edit By Prasanth

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்