சோனியா காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்!

வெள்ளி, 9 டிசம்பர் 2022 (22:12 IST)
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடியதையடுத்து அவருக்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். 
 
சோனியா காந்தி 76 வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையடுத்து அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்த நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார் 
 
நேரு இந்திரா காந்தியின் காங்கிரஸ் கட்சியை அடுத்த தலைமுறையாக கொண்டு செல்லும் சோனியா காந்திக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் சோனியா காந்தி அவர்கள் நீண்ட நாட்களாக நல்ல உடல் நலத்துடன் வாழ வேண்டும் என்றும் அவர் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார் 
 
ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை நேரில் சந்தித்த கமல்ஹாசன் விரைவில் அரசியலில் ஒரு அதிரடி முடிவை எடுப்பார் என்று கூறப்படுகிறது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்