"கடவுள் இல்லை என்பவர்களை பார்த்தால் சிரிப்பு வருகிறது" ரஜினிகாந்த்

Webdunia
ஞாயிறு, 12 மார்ச் 2023 (11:42 IST)
கடவுள் இல்லை என்று சொல்பவர்களை பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வருகிறது என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையின் விழா ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்ட நிலையில் இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசும்போது ’கடவுள் இல்லை என்று சொல்பவர்களை பார்த்து எனக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை என்று கூறினார்.
 
நமது உடலில் உள்ள இதயம் லப்டப் லப்டப் என்று பிறந்ததிலிருந்து சுமார் 70 வருடம் 80 வருடம் வரை அடித்துக் கொண்டிருக்கிறது. எந்த விஞ்ஞானியாவது இப்படி ஒரு மெக்கானிசத்தை செய்ய முடியுமா என்று கேட்டார். 
 
அதேபோல் நமது உடலில் உள்ள ரத்தத்தில் உள்ள ஒரு துளியாவது விஞ்ஞானிகளால் செய்ய முடியுமா? என்று கேட்டார். இதையெல்லாம் பார்த்தும் ஒரு சிலர் கடவுள் இல்லை என்று கூறியதை பார்க்கும்போது எனக்கு அழுவதாக சிரிப்பதா என்று தெரியவில்லை என்று கூறினார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்