தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர், தற்போது நெல்சன் இயக்கத்தில், ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷுட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டை மியூசிக் அகாடமியில் நடைபெற்று வரும் தனியார் அறக்கட்டளையின் 25 வது ஆன்டு விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் ஜனாதிபதி வெங்கையா நாயுடு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், நான் அரசியலில் ஈடுபடும்போது, இரண்டாவது அலை தொடங்கிவிட்டது. அப்போது வெளியே சென்றால் உடல்நிலை பாதிக்கப்படும் எனவும், அப்படியும் வெளியே செல்வதாக இருந்தால், முகக் கவசம் அணிந்துகொண்டு, சமூக இடைவேளையை கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறினார்.
தேர்தல் நேரத்தில் பிரச்சாரத்திற்கு நான் செல்லவேண்டியிருந்தால் முகக் கவசம் கழற்ற நேரிடும் ..இதை மக்களிடம் எப்படி சொல்வது என்ற யோசனையி இருந்தேன். அந்தசமயம் ‘என் ரசிகர்களிடம் மருத்துவர் விளக்கமளிப்பதாகக் ‘கூறி எனக்குத் துணையாக இருந்தார். அதனால் தான் அரசியலில் இருந்து விலகிக் கொண்டேன் ‘’ என்று கூறினார்.