உதவிய கோரிய தயாரிப்பாளர் விஏ துரை.. உடனே போனில் அழைத்து பேசிய ரஜினிகாந்த்..!

வியாழன், 9 மார்ச் 2023 (12:31 IST)
தயாரிப்பாளராக இருந்த வி ஏ துரை என்பவர் தற்போது மிகவும் கஷ்டத்துடன் இருப்பதாகவும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் இருப்பதாகவும் கூறப்பட்டது 
 
இது குறித்து அவர் வெளியிட்ட வீடியோவில் ரஜினிகாந்த் போன்றவர்கள் தனக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் தன்னை தற்போது தனது நண்பர்கள் காப்பாற்றி வருகிறார்கள் என்றும் ஆனாலும் மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிப்பதாகவும் தெரிவித்திருந்தார். 
 
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விஏ துரையிடம் போனில் அழைத்துப் பேசி உள்ளார். நான் இருக்கிறேன் கவலைப்படாதீர்கள் என்றும் எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்றும் ’ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து சென்னை வந்தவுடன் உங்களை நேரில் சந்திக்கிறேன் என்றும் ஆறுதல் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
ஏற்கனவே நடிகர் சூர்யா தயாரிப்பாளர் விஏ துரைக்கு ரூபாய் 2 லட்சம் ரூபாய் உதவி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்