மாவீரன் படத்தின் சேட்டிலைட் உரிமையைக் கைப்பற்றி முன்னணி தொலைக்காட்சி!

Webdunia
ஞாயிறு, 12 மார்ச் 2023 (11:40 IST)
சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தை மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது அஸ்வினுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே கருத்து மோதல் ஆரம்பம் முதலே உருவாகி வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அதைப் படக்குழு முற்றிலுமாக மறுத்துள்ளது. தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்த படத்தை தமிழ் சினிமாவின் முன்னணி விநியோக நிறுவனமாக தற்போது விளங்கிவரும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்ற உள்ளதாகவும், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து சிவகார்த்திகேயனின் படங்களை சன் தொலைக்காட்சி கைப்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்