உடல்நலக்குறைவால் அவதிப்படும் ரசிகைக்கு ஆறுதல் கூறிய ரஜினிகாந்த்!

Webdunia
சனி, 18 டிசம்பர் 2021 (08:45 IST)
உடல்நலக்குறைவால் அவதிப்படும் ரசிகைக்கு ஆறுதல் கூறிய ரஜினிகாந்த்!
உடல்நலக் குறைவால் அவதிப்படும் ரசிகைக்கு ஆறுதல் வார்த்தை கூறும் ரஜினிகாந்தின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
பெங்களூரை சேர்ந்த ரஜினி ரசிகை ஒருவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நிலை குறித்து அறிந்த ரஜினிகாந்த் அவருக்கு வீடியோகால் மூலம் ஆறுதல் கூறினார்
 
தைரியமாக இருக்க வேண்டும் என்றும், ஆண்டவன் இருக்கிறான் என்றும், உனக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன் என்றும், கண்டிப்பாக நீ குணமடைந்து மீண்டு வருவாய் என்றும் அவர் ஆறுதல் கூறினார்
 
மேலும் உன்னை பார்க்க என்னால் தற்போது வரமுடியாத சூழ்நிலை இருப்பதாகவும் அதற்காக வருந்துகிறேன் என்றும் கண்டிப்பாக நீ குணமடைந்து வீடு திரும்புவார் என்றும் அவர் ஆறுதல் கூறினார். இது குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்