யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது ஏன்? - நடிகர் ரஜினி விளக்கம்

Webdunia
செவ்வாய், 22 ஆகஸ்ட் 2023 (07:20 IST)
சமீபத்தில் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் ரஜினிகாந்த் விழுந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. திருமாவளவன் உள்ளிட்ட அரசியல்வாதிகளும் இது குறித்து விமர்சனம் செய்தனர்
 
 இந்த நிலையில் நேற்று இரவு சென்னை திரும்பிய ரஜினிகாந்த், யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். என்னை விட வயதில் சிறியவராக இருந்தாலும் ஒரு சன்னியாசி ஆகவோ அல்லது யோகியாகவோ இருந்தால் அவர்களது காலில் விழுவது எனது வழக்கம். அந்த வகையில் தான் அவருடைய காலில் விழுந்து நான் ஆசி பெற்றேன். 
 
மற்றபடி அவருடைய சந்திப்பு என்பது முழுக்க முழுக்க நட்பு ரீதியிலானது தான் அரசியல் ரீதியானது இல்லை என்று விளக்கம் அளித்தார் 
 
 ரஜினிகாந்தின் யோகி காலில் விழுந்த விவகாரம் சமூக வலைதளங்களில் கடந்த இரண்டு நாட்களாக சர்ச்சையாகி உள்ள நிலையில்  இந்த சர்ச்சை ரஜினியின் விளக்கத்திற்கு பிறகு முடிவுக்கு வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்