திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினியின் மகள்!

Webdunia
செவ்வாய், 7 டிசம்பர் 2021 (08:47 IST)
திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினியின் மகள்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது
 
கடந்த சில நாட்களாக திரையுலக பிரமுகர்கள் பலர் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா இரண்டாவது அலைக்கு பிறகு சமீபத்தில்தான் திருப்பதி கோவில் திறக்கப்பட்டது என்பதும் இதனை அடுத்து பக்தர்கள் குவிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் நேற்று சாமி தரிசனம் செய்தார்.. அவர் ரங்கநாயகி மண்டபத்திற்கு வந்தபோது அவருக்கு அர்ச்சகர்கள் வேத ஆசீர்வாதம் வழங்கினார் என்பதும் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது குறித்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்