தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன்? இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை!

செவ்வாய், 30 நவம்பர் 2021 (10:07 IST)
இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கும் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்து இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
இயக்குனர் தேசிய பெரியசாமி இயக்கிய ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் அதனை அடுத்து அவர் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்குவார் என்று கூறப்பட்டது. 
 
ஆனால் இந்த படம் குறித்த பேச்சு வார்த்தை நின்று விட்டதாகவும் இதனை அடுத்து தேசிங்கு பெரியசாமி, சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது
 
இந்த படத்தின் பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தில் இருப்பதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்