இதுவரை தமிழ் சினிமாவில் அவர் இயக்கியதெல்லாம் கார்த்தி, அஜித், ரஜினி மற்றும் சூர்யா போன்ற உச்ச நடிகர்களைதான். சமீபத்தில் அவர் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸான கங்குவா திரைப்படம் கேலிகளையும், மோசமான விமர்சனங்களையும் பெற்றது. இதனால் அவரது அடுத்த படம் தொடங்குவதில் சிக்கல் எழுந்தது.
இந்நிலையில் இப்போது அவர் ரஜினியை வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்கப் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை தெலுங்கு சினிமாவைச் சேர்ந்த ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் நிறுவனத்தின் மூலமாக ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. சிறுத்தை சிவா மற்றும் ரஜினிகாந்த் இணைந்த அண்ணாத்த திரைப்படம் ஒரு தோல்விப் படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.