கல்லூரியை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க கயாடு லோஹர் ஒப்பந்தம் ஆகியுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. சந்தானமும் இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ள நிலையில் சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். டாவ்ன் பிக்சர்ஸ் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆகாஷ் பாஸ்கரன் சமீபத்தில் அமலாக்கத்துறை விசாரணை வளையத்துக்குள் வந்த நிலையில் இந்த படம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இதற்கிடையில் சிம்பு வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க சென்றுவிட்டார். அதனால் இந்த படம் தாமதமாகியுள்ளது. இந்நிலையில் தற்போது இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் விக்ரம்மை வைத்து ஒரு படத்தை இயக்கப் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. விக்ரம்மின் 64 ஆவது படத்தை பிரேம்குமார் இயக்க, 65 ஆவது படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.