தனுஷுக்கும் எனக்கும் இடையே காதலா?... வதந்திகளுக்குப் பதிலளித்த மிருனாள் தாக்கூர்!

vinoth

திங்கள், 11 ஆகஸ்ட் 2025 (09:28 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் தெலுங்கு, இந்தி மற்றும் ஹாலிவுட் வரை சென்றுவிட்டார். இதன் மூலம் உலகளவில் அறியப்பட்ட நடிகராக உள்ளார். தற்போது நடிப்பில் மட்டும் இல்லாமல் இயக்கத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். அவரது சினிமா வாழ்க்கை மிகவும் பிரகாசமாக சென்றுகொண்டிருக்கும் நிலையில் திருமண வாழ்க்கை 18 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவுக்கு வந்தது.

இதையடுத்து தனுஷ் தற்போது தனிமையில் வாழ்ந்து வரும் நிலையில் அவரை சுற்றி தற்போது காதல் கிசுகிசு எழ ஆரம்பித்துள்ளது. பிரபல நடிகையான மிருனாள் தாக்கூரும் அவரும் ரகசியமாக ‘டேட்’ செய்து வருவதாக இந்தி ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதற்குக் காரணமாக அமைந்தது மிருனாள் தாக்கூர் கதாநாயகியாக நடித்த ‘சன் ஆஃப் சர்தார் 2’ படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் தனுஷ் கலந்துகொண்டதுதான்.

இந்நிலையில் இதுபற்றி விளக்கமளித்துள்ள மிருனாள் தாக்கூர் “நானும் தனுஷும் நல்ல நண்பர்கள். அந்த பட நிகழ்ச்சியில் எனக்காக தனுஷ் கலந்துகொள்ளவில்லை. அக்‌ஷய் குமார் அழைத்ததின் பேரில் கலந்துகொண்டார். இது போன்ற வதந்திகளைப் பார்க்கும்போது சிரிப்புதான் வருகிறது.” என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்