பிரபல தயாரிப்பாளருக்கு அடித்த ஜாக்பாட்… ரஜினி கொடுத்த வாக்கு!

vinoth
வியாழன், 11 ஜனவரி 2024 (07:46 IST)
ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் இப்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் பூஜை சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் நடந்தது. முதல் கட்ட ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் பெரும்பகுதி முடிந்துள்ளது.

இதையடுத்து ரஜினி, லோகேஷ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதத்தில் தொடங்க உள்ளது. இந்த படம்தான் ரஜினி நடிக்கும் கடைசி படமாக இருக்கும் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது ரஜினி தொடர்ந்து படங்களில் நடிக்க ஆசைப்படுவதாக சொல்லப்படுகிறது. அதனால் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை இயக்கப் போவது யார் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்