ரஜினியின் '2.0' எட்டு நாள் மொத்த வசூல் விபரம்

Webdunia
வெள்ளி, 7 டிசம்பர் 2018 (08:36 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் கடந்த மாதம் 29ஆம் தேதி வெளியான நிலையில் நேற்றுடன் இந்த படம் வெளியாகி 8 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் இந்த எட்டு நாட்களில் இந்த படம் ரூ.556 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

'2.0' திரைப்படம் இந்த எட்டு நாட்களில் தமிழ்கத்தில் ரூ.125 கோடியும், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ரூ.75 கோடியும், கேரள, கர்நாடக மாநிலங்களில் ரூ.46 கோடியும், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் ரூ.175 கோடியும், வெளிநாடுகளில் ரூ.135 கோடியும் வசூல் செய்துள்ளது.

மேலும் எட்டு நாட்களில் தமிழகத்தில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ள '2.0, இந்திய அளவில் அதிக வசூல் செய்த பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளது.

மேலும் இந்த படம் விரைவில் சீன மொழியில் சீனாவில் சுமார் 50 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் இந்த படத்தின் மொத்த வசூல் ரூ.1000 கோடியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்