படத்தின் பெரும்பாலான காட்சிகள் காடுகளை மையப்படுத்தி உள்ளதால் ஏராளமான காட்டு விலங்குகள் பயன்படுத்தப் பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்தியாவில் விலங்குகளை ஷூட்டிங்கில் பயன்படுத்த ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளதால் ஆப்பிரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் சென்று பெரும்பாலானக் காட்சிகளை படமாக்க உள்ளாராம் ராஜமௌலி.
இந்த படத்தில் பிரியங்கா சோப்ரா மற்றும் பிரித்விராஜ் ஆகியோர் நடிப்பதை உறுதி செய்துள்ளனர். இதையடுத்து இந்த படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்க ராஜமௌலி, விக்ரம்மிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த கதாபாத்திரம் நெகட்டிவ் தன்மை கொண்டதாக இருக்கும் என சொல்லப்படுகிறது.