அட நம்புங்கப்பா... இது நம்ம ரைசா தான் - ஜீரணிக்கமுடியாத இளம் வயது புகைப்படம் வைரல்!

Webdunia
செவ்வாய், 12 மே 2020 (08:38 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் தமிழ் சினிமாவில் பெரும் பிரபலமானவர் ரைசா வில்சன். நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவாக பட வாய்ப்புகளும் மல மலவென குவியத்தொடங்கியது. இதனை ரைசா சரியான நேரத்தில் மிகவும் ஷார்ப்பாக பயன்படுத்திக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்னரே ரைசா விஐபி- 2 படத்தில் நடித்தார். பிறகு பிக் பாஸ் ஹவுஸ் மெட் ஆன ஹரிஷ் கல்யாணுடன் சேர்ந்து ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் நடித்திருந்தார். அப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் தற்போது ‘ஆலிஸ்’ விஷ்ணு விஷாலுடன் FIR, அலைஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் ரைசா அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது தனது இளம் வயது புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு " இது நான் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?” என்று கேட்டுள்ளார். இதற்கு கமெண்ட்ஸ் செய்துள்ள ரசிகர்கள் நம்ப முடிந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என கூறி வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Would you believe it if I told you this was me

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்