உலகம் முழுவதும் 10 ஆயிரம் திரைகளில் பிரபாஸின் ராதே ஷ்யாம்!

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (15:29 IST)
பிரபாஸ் நடித்துள்ள ராதே ஷ்யாம் திரைப்படம் சுமார் 10000 திரைகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழில் குறிப்பிடத்தகுந்த வகையில் ஹிட் பாடல்களைக் கொடுத்து கவனத்தை ஈர்த்தவர் ஜஸ்டின் பிரபாகரன். இருந்தபோதும் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் தெலுங்கில் பிரம்மாண்டமாக தயாராகும் ராதே ஷ்யாம் படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் ஐந்து மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

மார்ச் 11 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் நிலையில் சுமார் 10000 திரையரங்குகளில் இந்த படம் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்