’புஷ்பா’ வெளியான தியேட்டரை அடித்து நொறுக்கிய ரசிகர்கள்: ஆபரேட்டர் ரூமுக்குள் நுழைந்ததால் பரபரப்பு!

Webdunia
சனி, 18 டிசம்பர் 2021 (15:29 IST)
அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியான நிலையில் இந்த படம் ஒரே நாளில் 40 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்ததாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் திருப்பதியில் ஒரு திரையரங்கில் ’புஷ்பா’ திரைப்படம் முதல் நாள் முதல் காட்சி திரையிடப்பட்டது. அப்போது ஆடியோ கேட்கவில்லை என ரசிகர்கள் ஆத்திரம் அடைந்தனர்
 
ஒரு கட்டத்தில் ரசிகர்கள் ஆத்திரம் அடைந்து தியேட்டரில் உள்ள சேர்களை அடித்து நொறுக்கினார்கள். அதுமட்டுமின்றி ஆபரேட்டர் ரூமுக்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
இதனை அடுத்து இது குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து ரசிகர்களை சமாதானப்படுத்தினார். இந்த சம்பவம் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்