’புஷ்பா’ ரசிகர்களூக்கு ஒரு இனிப்பான செய்தி!

வியாழன், 16 டிசம்பர் 2021 (18:44 IST)
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படத்தின் தெலுங்கு சென்ற சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்டது என்றும் தமிழ் மலையாளம் கன்னடம் மற்றும் ஹிந்தி சென்சார் சான்றிதழ் இன்னும் கிடைக்கவில்லை என்றும் தகவல் வெளியானதை பார்த்தோம்.
 
இதனால் இந்த படம் தெலுங்கு தவிர மற்ற மொழிகளில் நாளை திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா என்ற கேள்வியும் எழுந்தது. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி தமிழ் மற்றும் மலையாள சென்சார் சான்றிதழ் வெளி வந்துவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர் 
 
மேலும் இன்னும் சில மணி நேரங்களில் ஹிந்தி மற்றும் கன்னட சென்சார் சான்றிதழ் கிடைத்துவிடும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். எனவே நாளை திட்டமிட்டபடி உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் புஷ்பா திரைப்படம் ரிலீஸ் ஆவது உறுதி என்று கூறப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்