'புஷ்பா’ ரிலீஸ் தேதி தள்ளி வைப்பா? ரசிகர்கள் அதிர்ச்சி!

வியாழன், 16 டிசம்பர் 2021 (16:20 IST)
அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா’ திரைப்படம் நாளை ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படம் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப் பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
புஷ்பா திரைப்படம் நாளை உலகம் முழுவதம் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் தெலுங்கு பதிப்பு சென்சார் சான்றிதழ் மட்டுமே தற்போது படக்குழுவினர்களுக்கு கிடைத்துள்ளது. தமிழ் மலையாளம் கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளின் சென்சார் சான்றிதழ் இன்னும் கிடைக்கவில்லை என்பதால் இந்த நான்கு மொழிகளிலும் ரிலீஸ் செய்து ஒரு வாரம் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது
 
இருப்பினும் இன்று இரவுக்குள் தமிழ் மற்றும் ஹிந்தி பதிப்புகளின் சென்சார் சான்றிதழ் வாங்க படக்குழுவினர் தீவிர முயற்சி எடுத்து வருவதாகவும் இந்த முயற்சிக்கு பலன் அளிக்கும் என்றும் கூறப்பட்டு வருவதால் திரையுலகினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்