ஐந்தாம் நாளில் ஐம்பது சதவீதம் சரிந்த புஷ்பா 2 கூட்டம்!

vinoth
செவ்வாய், 10 டிசம்பர் 2024 (13:43 IST)
நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் ஆகியோரின் நடிப்பில் கடந்த வாரம் ரிலீஸானது இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்றான புஷ்பா 2’. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல இந்திய மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர் கூட்டத்தைக் கவர்ந்துள்ளது.

இதுவரை சுமார் 1000 கோடி ரூபாய் வசூலித்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வார விடுமுறை முடிந்து வேலை நாட்கள் தொடங்கியுள்ள நிலையில் நேற்று இந்த படத்துக்கான கூட்டம் கிட்டத்தட்ட 50 சதவீதம் குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனாலும் தற்போது புஷ்பா 2 திரைப்படம் ரன்பீர் கபூரின் அனிமல் திரைப்படத்தின் வாழ்நாள் கலெக்‌ஷனை முந்தியுள்ளது. தொடர்ந்து வெற்றிகரமாக ஓடும்பட்சத்தில் இந்த படம் பல படங்களின் கலெக்‌ஷனை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்