புஷ்பா 2 படத்தில் பாதியை நான் இயக்கவில்லை… இணை இயக்குனரின் பெயரை ஓப்பனாக சொன்ன சுகுமார்!

vinoth

செவ்வாய், 10 டிசம்பர் 2024 (08:29 IST)
நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் ஆகியோரின் நடிப்பில் கடந்த வாரம் ரிலீஸானது இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்றான புஷ்பா 2’. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல இந்திய மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர் கூட்டத்தைக் கவர்ந்துள்ளது.

இதுவரை சுமார் 1000 கோடி ரூபாய் வசூலித்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் சுகுமார் ஒரு நேர்காணலில் பேசும்பொது “புஷ்பா 2 படத்தில் கிட்டத்தட்ட 40 சதவீதம் காட்சிகளை நான் இயக்கவில்லை. என்னுடைய இணை இயக்குனர் ஸ்ரீமன்தான் இயக்கினார்.’ என ஓப்பனாக பேசியுள்ளார்.

புஷ்பா 2 உருவாக்கத்தின் போதே அல்லு அர்ஜுனுக்கும் சுகுமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்து ஷூட்டிங் பாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போது சுகுமார் இப்படி பேசியிருப்பதன் அந்த தகவல்களின் உண்மைத்தன்மை அதிகமாகியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்