தனுஷின் விருப்பத்திற்கு எதிராகத் தயாரிப்பாளர்… ’’ஜகமே தந்திரம்’’ ஒடிடியில் ரிலீஸ்

Webdunia
வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (20:22 IST)
தனுஷின் ஜகமே தந்திரம் படம் ஒடிடியில் வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

ஏலே திரைபடத் தயாரிப்பாளர், இப்படம் தியேட்டரில் ரிலீஸாகி 30 நாட்களுக்குப் பிறகுதான் ஒடியில் ரிலிசாகும் என்ற கடிதம் கொடுக்காமல் விட்டுவிட்டார். இக்கடிதம்கொடுத்தால்தான் ஏலே படம் தியேட்டரில் ரிலீஸாகு எனத் தியேட்டர் உரிமையாளர்கள் கூறியுள்ளனர் இதனால் தயாரிப்பாளர் தரப்புக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளது.

ஏலே படம் இன்று  ( பிப்.,12 தேதி) ரிலீசாக இருந்த  இப்படம் வரும் பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி விஜய் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியாகவுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு  அறிக்கைவெளியிட்டுள்ளது.

ஏற்கனவே புலிக்குத்திப் பாண்டி, நாங்க ரொம்ப பிஸி ஆகிய படங்கள் நேரடியாகத் தொலைக்காட்சியில் ரிலீஸானது.

இந்நிலையில்,ஏலே படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர்தான் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தையும் தயாரித்துள்ளார்.

இப்படத்தை ஏற்கனவே ஒடிடியில் வெளியாவதாகச் செய்திகள் வெளியானது. அப்போது தியேட்டர் அதிபர்கள் இப்படம் தியேட்டர்களில் வெளியாக வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தனர். தனுஷின் ரசிகர்கள்,இயக்குநர் கார்த்திக் சுப்புராஜும் இதைத்தான் விரும்பினர். இந்நிலையில் ஜகமே தந்திரம் படத் தயாரிப்பாளர் இப்படத்தை ஒடிடியில் அதிகத்தொகைக்கு விற்றுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தனுஷ், கார்த்திக்சுப்புராஜ் மற்றும் ரசிகர்கள் தியேட்டரில் இப்படம் வெளியாக ஆர்வம் காட்டினாலும் தயாரிப்பாளர் இம்முடிவு எடுக்க  தியேட்டர் அதிபர்கள் கொடுத்த அழுத்தமே காரணம் எனத் தகவல்கள் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்