ஆர் ஆர் ஆர் ஒரு தமிழ்ப் படம்… தப்பாக சொல்லி சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா சோப்ரா!

Webdunia
வியாழன், 30 மார்ச் 2023 (08:39 IST)
ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆல்யா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடித்து வெளியான படம் ஆர்.ஆர்.ஆர். உலகம் முழுவதும் பெரும் ஹிட் அடித்த இந்த படம் மொத்தமாக 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து பெரும் வசூல் சாதனையையும் படைத்தது. நேரடியாக போட்டி பிரிவில் ஆஸ்கருக்கு இந்த படத்தை பல பிரிவுகளில் நாமினேட் செய்தனர் படக்குழு. இதையடுத்து நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் ஆஸ்கர் மேடையில் RRR ஒரு பாலிவுட் படம் என சொல்லப்பட்டது விவாதங்களைக் கிளப்பியது. இந்தியாவில் 5க்கும் மேற்பட்ட மொழிகளில் இந்த படம் ரிலீஸ் ஆனாலும், RRR ஒரு தெலுங்கு படம்தான். மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டது.

இந்நிலையில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா இப்போது இதுபற்றி மேலும் ஒரு சர்ச்சையை உருவாக்கியுள்ளார். ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் “RRR பாலிவுட் படம் இல்லை. ஒரு தமிழ்ப் படம்” என தவறாகக் கூறினார். இது இப்போது இணையத்தில் இப்போது ட்ரோல்களுக்கு ஆளாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்