20 பெண்களை சயனைடு வைத்து கொலை செய்தவரின் உண்மைக்கதையில் பிரியாமணி!

Webdunia
ஞாயிறு, 4 அக்டோபர் 2020 (15:00 IST)
கர்நாடக மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சயனைடு மோகன் என்ற பயங்கர குற்றவாளி 20 பெண்களை சயனைடு வைத்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு அது குறித்த வழக்கும் நடைபெற்று வருகிறது 
 
இந்த நிலையில் சயனைடு மோகன் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படத்தை தற்போது தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பிரபல தெலுங்கு இயக்குனர் ஒருவர் இயக்கவிருக்கும் இந்தப் படத்தில் இந்த வழக்கை விசாரணை செய்யும் போலீஸ் அதிகாரியாக பிரியாமணி நடிக்க உள்ளார் 
 
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் இந்த படம் உருவாகவிருப்பதாகவும், நான்கு மொழிகளிலும் பிரியாமணி நாயகியாக நடிக்க உள்ளார் என்றும் இதே படம் ஹிந்தியிலும் தயாராகவிருப்பதாகவும், இந்தியில் மட்டும் பிரபல நடிகர் ஒருவர் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது 
 
பிரியாமணி கடந்த சில ஆண்டுகளாக தமிழ் படங்களில் நடிக்காத நிலையில் நீண்ட இடைவெளிக்குப்பின் தமிழுக்கு அவர் மீண்டும் ரீஎன்ட்ரி ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்