ஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணி தலைவி அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 18 மே 2018 (20:54 IST)
பிரபல காமெடி நடிகர் ஆர்ஜே பாலாஜி அரசியல் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார் என்பதையும், அந்த படத்தின் டைட்டில் LKG என்பதையும் சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் நாயகி குறித்த அறிவிப்பை ஆர்ஜே பாலாஜி தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார்.
 
ஆர்ஜே பாலாஜிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை ப்ரியா ஆனந்த் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அவர் தனது கட்சியின் மகளிர் அணி தலைவி என்று டுவிட்டரில் அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி ஆர்ஜே பாலாஜிக்கு ப்ரியா ஆனந்த் அரசியல் பாடம் சொல்லி கொடுப்பது போலவும் ஏ ஃபார் அரசியல், பி ஃபார் பினாமி மற்றும் சி ஃபார் கமிஷன் என்று கரும்பலகையில் எழுதியிருபது போன்றும் ஒரு ஸ்டில்லை ஆர்ஜே பாலாஜி வெளியிட்டுள்ளார். இந்த புதிய ஸ்டில்லுக்கு டுவிட்டரில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
 
மேலும் இந்த ஸ்டில்லில் ஆர்ஜே பாலாஜி அணிந்திருக்கும் மோதிரத்தில் நாஞ்சில் சம்பத் படம் உள்ளது. இதனால் அவரும் இந்த படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அரசியலில் இருந்து சிறிது காலம் ஒதுங்கியிருந்த தான் ஆர்ஜே பாலாஜியுடன் இணைந்து ஒரு புதிய பயணத்தை தொடங்கவுள்ளதாக நாஞ்சில் சம்பத் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்