என்னிடம் 117 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்: ரிசார்ட் ஓனர் சொன்னதை சுட்டிக்காட்டிய நீதிபதி

வெள்ளி, 18 மே 2018 (17:00 IST)
கர்நாடக மாநில முதல்வராக பதவியேற்றுள்ள எடியூரப்பா 15 நாட்களுக்குள் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கவர்னர் அவகாசம் அளித்திருந்தார். ஆனால் இதுகுறித்த வழக்கு ஒன்றை விசாரணை செய்த சுப்ரீம் கோர்ட், முதல்வர் எடியூரப்பா தனது பெரும்பான்மையை நாளை மாலை 4 மணிக்குள் சட்டமன்றத்தில் நிரூபிக்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டார்
 
இதற்குக் எதிர்ப்பு தெரிவித்த பாஜக வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, ஒருசில எம்.எல்.ஏ.க்கள் பெங்களூரில் இருந்து தொலைவில் இருப்பதால் பெரும்பான்மையை நிரூபிக்க மேலும் சில நாட்கள் அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
 
ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதி ஏ.கே. சிக்ரி, ‘தன்னிடம் 117 எம்.எல்.ஏ.க்கள் (காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம்) ஆதரவு இருப்பதாக கர்நாடக கவர்னருக்கு ரிசார்ட் உரிமையாளர் கடிதம் எழுதி இருப்பதாக தெரியவந்துள்ள நிலையில் பாஜகவால் ஏன் முடியாது? என்று வேடிக்கையாக குறிப்பிட்டார். காரசார விவாதம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென நீதிபதி ஜோக் அடித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்