ரட்சகன் இரண்டாம் பாகம் எடுக்கப் போறேன்… பிக்பாஸ் வீட்டில் இயக்குனர் பிரவீன் காந்தி அறிவிப்பு!

vinoth

வெள்ளி, 10 அக்டோபர் 2025 (07:13 IST)
தமிழ் சினிமாவில் ரட்சகன் படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் பிரவீன் காந்தி. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ரிலீஸ் ஆன அந்தபடம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், அடுத்தடுத்து ஜோடி மற்றும் ஸ்டார் ஆகிய திரைப்படங்களை பிரவீன் காந்தி இயக்கினார்.

அதன் பின்னர் அவரே கதாநாயகனாக நடித்து ‘துள்ளல்’ என்ற படத்தை இயக்கினார். அந்த படம் பெரிய வெற்றி பெறாததால் அதன் பிறகு அவரால் தொடர்ச்சியாகப் படங்கள் எடுக்க முடியாத சூழல் உருவானது. இதையடுத்து தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ஆக்ரோஷமாகப் பேசி ஆதரவையும் விமர்சனங்களையும் பெற்று வந்தார்.

அந்த புகழின் மூலமாக பிக்பாஸ் வீட்டுக்கு சென்றுள்ள அவர் அங்கு தன்னுடைய முதல் படமான ‘ரட்சகன்’ படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் திட்டம் உள்ளதாக அறிவித்துள்ளார். இது சம்மந்தமாக அவர் “நாகார்ஜுனாவ வச்சு ரட்சகன் 2 ப்ளான் பண்ணிட்டு இருக்கேன். ஏன்னா இப்போ அந்த படத்துக்கு vibe உருவாகி இருக்கு. இப்போ நான் ‘ரட்சகன்2’ அறிவிச்சாலே அதுக்குன்னு பெரிய எதிர்பார்ப்பு வந்துடும்.” எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்