'கருப்பு' படத்தின் படப்பிடிப்பில் இன்னும் சுமார் பத்து நாட்கள் மீதம் இருக்கும் நிலையில், அதன் பணிகள் தாமதம் ஆகலாம் என்று கூறப்பட்டு வருகிறது. எனவே, ஆர்.ஜே. பாலாஜி அதற்குள்ளாகவே தனது அடுத்த படத்திற்கான வேலைகளை தொடங்கி விட்டதாகவும் தெரிகிறது.
ஆர்.ஜே. பாலாஜியின் அடுத்த படத்தில் 'குட் நைட்' மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆர்.ஜே. பாலாஜி கூறிய கதை மணிகண்டனுக்கு பிடித்துவிட்டதாகவும், அவர் இந்தப் படத்தில் நடிக்கச் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.