லோகேஷ் கனகராஜ் அடுத்தடுத்த பெற்ற வெற்றிகளால் இந்திய சினிமாவில் கவனிக்கப்படும் இயக்குனர்களில் ஒருவராக உருவானார். அதனால் அவர் இயக்கத்தில் நடிக்க ராம் சரண், அமீர்கான், பிரபாஸ் போன்ற கதாநாயகர்கள் ஆர்வம் காட்டினார். ஆனால் இதெல்லாம் அவர் இயக்கிய கூலி படம் ரிலீஸுக்கு முன்புவரைதான்.
ஏனென்றால் கூலி படத்தில் அவர் நடித்திருந்த கதாபாத்திரம் ஒரு கோமாளி போல உருவாக்கப்பட்டிருந்தது. அதனால் அமீர்கானின் ரசிகர்கள் ஏன் இப்படிப்பட்ட ஒரு வேடத்தில் நடிக்க ஒத்துக்கொண்டார் என அதிருப்தியை வெளியிட்டனர். அதே போல நாகார்ஜுனா நடித்த வில்லன் வேடமும் சரியாக உருவாக்கப்படாமல் தத்தி போல உருவாக்கப்பட்டிருப்பதாக கேலிகள் பரவின.
இதனால் நாகார்ஜுனா கூட லோகேஷ் மேல் அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவரை 98 படங்களில் நடித்துள்ள நாகார்ஜுனா வில்லனாக நடித்ததே இல்லை. ரஜினிக்காகவும் லோகேஷுக்காகவும்தான் வில்லனாக நடிக்க ஒத்துக்கொண்டார். ஆனால் அந்த கதாபாத்திரத்தை சரியாக உருவாக்காமல் கோட்டை விட்டுவிட்டார் லோகேஷ் என அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்படுகிறது.