தமிழ் சினிமாவின் சகலகலா வல்லவன் ஆன தனுஷ் தெலுங்கு, இந்தி, பிரென்ச் மற்றும் ஆங்கில மொழிப் படங்கள் வரை சென்று நடித்துவிட்டார். தமிழுக்கு அடுத்து தெலுங்கில் அவருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வருகிறது. தெலுங்கில் அவர் நடித்த சார் மற்றும் குபேரா போன்ற படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெற்றன.
இந்த வெற்றிகளால் தெலுங்கு தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் தனுஷை அணுகத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில் தனுஷ் தற்போது மூன்றாவதாக ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அந்த படத்தை விராட பர்வம் படத்தை இயக்க வேணு உடுகுலா இயக்க, யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
சமீபத்தில் இயக்குனர் வேணு தனுஷை சந்தித்து கதையை விவரித்துள்ளதாகவும், கதை தனுஷுக்கு திருப்தியளிக்கும் விதமாக உருவாகியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தனது படங்களை முடித்தபின்னர் தனுஷ் இந்த படத்தில் நடிப்பார் என சொல்லப்படுகிறது.