துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மகனான இன்பநதி, மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்தத் திட்டம் இன்னும் சில ஆண்டுகளுக்குத் தள்ளி போய் உள்ளதாகக் கூறப்படுகிறது.
மாரி செல்வராஜ் தற்போதுதான் 'பைசன்' என்ற படத்தை எடுத்து முடித்திருக்கிறார். இதனை அடுத்து அவர் தனுஷ் நடிக்கும் ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும், இந்த படத்தை முடிக்க அவருக்கு குறைந்தது ஒரு ஆண்டு ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தக் படத்தை முடித்துவிட்டுத்தான் அவர் இன்பநதி படத்தின் படப்பிடிப்பை தொடங்குவார் என்றும், எனவே மாரி செல்வராஜ் - இன்பநிதி படம் வெளியாக இன்னும் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகும் என்றும் கூறப்பட்டு வருகிறது.