ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் கருப்பு படத்தில் சூர்யா நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடிக்க மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில் நட்டி நட்ராஜ், ஸ்வாஸிகா மற்றும் ஆர் ஜே பாலாஜி உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் ஷூட்டிங் பெரும்பாலும் நிறைவடைந்துவிட்டது. இன்னும் ஓடிடி மற்றும் சேட்டிலைட் வியாபாரம் முடியாததால் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் உள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் படக்குழ் மேல் அதிருப்தியில் அவ்வபோது பதிவுகளை வெளியிட்டு வந்தனர். இதனால் ரசிகர்களை சாந்தப்படுத்தும் விதமாக நேற்று இந்த படத்தின் முதல் தனிப்பாடலான God mode பாடல் வெளியானது.
இந்நிலையில் படம் குறித்துப் பேசியுள்ள இயக்குனர் ஆர் ஜே பாலாஜி “கருப்பு படத்தின் படத்தொகுப்பு பணிகள் எல்லாம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. நான் படத்தைப் பார்த்துவிட்டேன். எனக்குப் படம் நிறைவாக உள்ளது. என் தயாரிப்பாளர்கள் (எஸ் ஆர் பிரபு & பிரகாஷ் பாபு) ப்ளு சட்ட மாறனை விட அதிகமாக படத்தைக் கவனித்துப் பார்ப்பார்கள். அவர்களேப் படத்தைப் பார்த்து நிம்மதியாக உள்ளதாகக் கூறியுள்ளனர்.” எனத் தெரிவித்துள்ளார்.