நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்திற்கு 10 முதல் 20% வாக்குகள் இருப்பதாக பெரும்பாலான அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், பிரசாந்த் கிஷோர் 20% வாக்குகள் வரை விஜய்க்கு கிடைக்கும் என்று கூறியிருந்தார். இருப்பினும், அவர் தற்போது பீகார் தேர்தல் பணி காரணமாக இப்போதைக்கு தமிழக வெற்றி கழகத்திற்கு தன்னால் வேலை செய்ய முடியாது என்று கூறி ஒதுங்கிவிட்டார்.
இந்த நிலையில், பிரசாந்த் கிஷோர் கூறியது போல் விஜய்க்கு 20 சதவீத வாக்குகள் இருப்பதை தான் ஒப்புக்கொள்வதாக பத்திரிகையாளர் மணி தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். ஆனால், அதே நேரத்தில், "விஜய் தனித்து நின்றால் ஆட்சி அமைக்க முடியாது என்றும், எதிர்க்கட்சித் தலைவராகக் கூட முடியாது என்றும், ஒன்று பாஜக இல்லாத அதிமுக உடன் கூட்டணி சேர வேண்டும் அல்லது ஒரு தனி அணியை அமைக்க வேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார்.