’’பொன்னியின் செல்வன்’’ பட புதிய அப்டேட் கொடுத்த பிரகாஷ்ராஜ்

Webdunia
புதன், 18 ஆகஸ்ட் 2021 (16:07 IST)
இயக்குனர் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வரும் நிலையில் இன்றோடு முடியவுள்ளது.
 
தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவரான இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. தென்னிந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் எல்லாம் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பை துரிதமாக முடிக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளாராம்.

கொரோனா இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்ட படப்பிடிப்பு தற்போது தொடங்கி பாண்டிச்சேரியில் நடந்து வந்த படப்பிடிப்பு இப்போது ஐதராபாத்தில் நடக்கிறது. அந்த படப்பிடிப்பு இன்றோடு முடிய உள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் ஜெய்ப்பூரில் தொடங்க உள்ளதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், சமீபத்தில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட நடிகர் பிராகாஷ் ராஜ் இப்படத்தில் நடிக்கும் நடிகர் கார்த்தி, இயக்குநர் மணிரத்னத்துடன் இணைந்து ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

மேலும், இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியர் அருகில் உள்ள ஒர்ச்சா என்ற இடத்தில் நடைபெறவுள்ளதால் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், கார்த்தி, மணிரத்னம் உள்ளிட்டோர் அம்மாநிலத்திற்குச் சென்றுள்ளனர்.

இதுகுறித்த புகைப்படைத்தான் பிரகாஷ்ராஜ் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்