அறுவை சிகிச்சைக்கு பின் எப்படி இருக்கின்றார் பிரகாஷ்ராஜ்? வைரல் புகைப்படம்

புதன், 11 ஆகஸ்ட் 2021 (21:33 IST)
பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் தனது வீட்டில் தடுமாறி கீழே விழுந்ததை அடுத்து அவருடைய தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஸ்கேன் எடுத்துப் பார்த்தபோது அவரது தோல் பட்டையில் உள்ள எலும்பு லேசாக பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்தது 
 
இதனையடுத்து அவர் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக நேற்று ஐதராபாத் சென்றார் இந்த நிலையில் இன்று அவருக்கு அறுவை சிகிச்சை முடிந்து விட்டதாக தகவல் வெளிவந்துள்ளது 
 
இதனை அடுத்து பிரகாஷ்ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் மருத்துவமனையில் படுக்கையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் எனது நண்பர் டாக்டர் குருவா ரெட்டி அவர்கள் எனக்கு சிறப்பாக அறுவை சிகிச்சை செய்துள்ளார் இப்போது நான் நலமாக இருக்கிறேன். எனக்காக பிரார்த்தனை செய்து அனைவருக்கும் நன்றி. விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் 
 
இதுகுறித்த புகைப்படத்தை அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது
 
 

The

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்