ரிலாக்ஸ் சண்டே... மகனுடன் கியூட் வீடியோ வெளியிட்ட பிரகாஷ் ராஜ்!

Webdunia
திங்கள், 6 ஏப்ரல் 2020 (08:19 IST)
சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு  நாடுகளில் உள்ள மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர்.

அந்த வகையில் தற்போது நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் மகனுடன் இருக்கும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது "ஞாயிற்றுக்கிழமை எனது தோட்டத்தில் என் மகன் என்னை பழைய நினைவுக்கு கொண்டு சென்றான்... ஆம் நான் என் சிறு வயதில் என் அப்பாவிற்கு செய்ததை இன்று  அவன்  எனக்கு செய்கிறான் எனக்கூறி " படுத்து ஓய்வெடுத்திருந்த போது மகன் தன் மீது ஏறி மசாஜ் செய்த வீடியோவை வெளியிட்டு வீட்டிலேயே .. பாதுகாப்பாக இருங்கள் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்