தனிமைப்படுத்தப்பட்ட அதிமுக எம்எல்ஏ: பரபரப்பு தகவல்

திங்கள், 6 ஏப்ரல் 2020 (07:20 IST)
தனிமைப்படுத்தப்பட்ட அதிமுக எம்எல்ஏ:
கொரோனா வைரஸ் ஏழை பணக்காரன், பாமரன் பதவியில் உள்ளவர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரையும் தாக்கி வருவது தெரிந்ததே. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராமநாதபுரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ மணிகண்டன் அவர்கள் கீழக்கரையை சேர்ந்த 71 வயது கொரோனா பரவிய நபர் ஒருவரின் இறுதி சடங்கில் கலந்துகொண்டார்
 
இதனையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமென ராமநாதபுரம் மாவட்டம் வீரராகவராவ் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார். இந்த அறிவுறுத்தலை ஏற்று கொண்டு ராமநாதபுரம் அதிமுக எம்எல்ஏ மணிகண்டன் அவர்கள் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டதாகவும், அவர் 14 நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வார் என்றும் கூறப்படுகிறது. 
 
இருப்பினும் அவருக்கு எடுக்கப்பட்ட ரத்த மாதிரி சோதனையில் இதுவரை அவரை கொரோனா தாக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இராமநாதபுரம்அதிமுக எம்எல்ஏ ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்