LIK படத்தின் ஒரு பாடலுக்கு 5 கோடி ரூபாயா?... தயாரிப்பாளருக்கு அதிர்ச்சி கொடுத்த விக்னேஷ் சிவன்!

vinoth

வியாழன், 27 மார்ச் 2025 (09:40 IST)
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ப்ரதீப் ரங்கநாதன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.  இதில் எஸ் ஜே சூர்யா, சீமான் மற்றும் க்ரீத்தி ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றன. லலித்குமார் தயாரிக்கிறார் இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது.

இந்த படத்தின் ஷூட்டிங் கோவை மற்றும் சிங்கப்பூரில் அடுத்தடுத்து நடந்தது. ஆனால் சில காரணங்களால் கடந்த சில மாதங்களாக ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் சண்டிகாரில் தொடங்கி நடந்தது. இந்த படத்துக்கு LIK (Love insurance company) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் “தீமா” வெளியாகி கவனம் பெற்றது.

இந்த படம் எதிர்காலத்தில் நடக்கும் ஒரு பேண்டசி காதல் கதையாக உருவாகி வருகிறது. படத்தின் பெரும்பாலானக் காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் இப்போது ஒரு பாடலை படமாக்கவேண்டும் என்றும், அதைப் படமாக்க 5 கோடி ரூபாய் செலவாகும் என புதிதாக ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளாராம் விக்னேஷ் சிவன்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்