வங்க கடலில் ஏற்பட்ட வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, சென்னையில் திடீரென இன்று மழை பெய்தது. சில நிமிடங்கள் பெய்தாலும், மழை நீர் பல இடங்களில் தேங்கியிருப்பதாகவும், இதனால் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் ஏப்ரல் மாதத்தில் 100 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளதாகவும், தற்போது மேக கூட்டங்கள் சிறுசேரி, கேளம்பாக்கம், மகாபலிபுரம், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், ஈசிஆர் பகுதிகளுக்கு நகர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு, சென்னையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி 100 மில்லிமீட்டர் மழை பெய்த நிலையில், 10 ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட அதே நாளில், அதாவது ஏப்ரல் 16ஆம் தேதி 100 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.