லூசிபர் படத்தில் பிரபுதேவா… இயக்குனர் மோகன் ராஜா வெளியிட்ட வைரல் புகைப்படம்!

Webdunia
திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (14:55 IST)
சமீபத்தில் மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் படம் லூசிபர். இப்படம் மலையாள சினிமாவில் 200 கோடி வசூலித்த முதல் திரைப்படம் என்ற சாதனையை நிகழ்த்தியது. இதையடுத்து இந்த படம் இப்ப்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. லூசிபர் என்ற பெயர் காட்பாதர் என மாற்றப்பட்டுள்ளது. மோகன் லால் வேடத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கிறார்.

மேலும் பிருத்விராஜ் நடித்திருந்த வேடத்தில் நடிக்க சல்மான் கான் நடித்துள்ளார். சல்மான் கான் நடிக்கும் நேரடி முதல் தென்னிந்திய மொழி திரைப்படமாக காட்பாதர் அமைந்துள்ளது. சமீபத்தில் படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியானது.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் இப்போது பாடல் ஒன்றை படமாக்கியுள்ளார். இந்த பாடலை பிரபுதேவா வடிவமைத்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார் இயக்குனர் மோகன் ராஜா.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்