பிரபுதேவாவின் ‘பாகீரா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

வியாழன், 21 ஜூலை 2022 (19:12 IST)
பிரபுதேவா நடித்த மை டியர் பூதம் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவருடைய அடுத்த திரைப்படமான ‘பாகீரா’  என்ற திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்கி உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிகட்டத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த படம் ஒரு திரில்லர் கதையம்சம் கொண்டது என்றும் இந்த படத்தின் கதை தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத வகையில் வித்தியாசமாக இருக்கும் கதையம்சம் கொண்டது என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்