தெலுங்கு சினிமாவில் சாதனைப் படைத்த பிரபாஸின் சலார் திரைப்படம்!

Webdunia
புதன், 6 டிசம்பர் 2023 (08:05 IST)
பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அதற்கு முக்கியக் காரணம் இந்த படத்தை இயக்குவது கே ஜி எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் என்பதுதான்.  இந்த படத்தை கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரிக்கிறார்.

டிசம்பர் 22 ஆம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் டிரைலர் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி ரிலீஸானது. 5 மொழிகளில் வெளியான இந்த டிரைலர் மொத்தம் 100 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் இப்போது சலார் படத்தின் வியாபாரம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் தெலுங்கு (ஆந்திரா மற்றும் தெலங்கானா) திரையரங்க வியாபாரம் மட்டும் சுமார் 186 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாம். இது தெலுங்கு சினிமாவில் இதுவரை எந்த ஒரு படமும் இவ்வளவு பெரிய தொகைக்கு வியாபாரம் செய்யப்பட்டதில்லை என சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்