சலார் படத்தின் ப்ரமோஷன் பணிகளில் ஆர்வம் காட்டாத பிரபாஸ்!

வெள்ளி, 1 டிசம்பர் 2023 (07:17 IST)
பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அதற்கு முக்கியக் காரணம் இந்த படத்தை இயக்குவது கே ஜி எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் என்பதுதான்.  இந்த படத்தை கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரிக்கிறார்.

டிசம்பர் 22 ஆம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு ரிலீஸ் ஆகவுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் டீசர் ரிலீஸாகி நல்ல கவனம் பெற்ற நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. சலார் முதல் பாகத்தின் டிரைலர் டிசம்பர் 1 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்நிலையில் இந்த படக்குழுவினரிடம் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைக்க வேண்டாம் என பிரபாஸ் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வழக்கமாக தன்னுடைய எல்லா படங்களையும் இந்தியா  முழுவதும் சென்று ப்ரமோட் செய்யும் வழக்கமுள்ள பிரபாஸ் ஏன் இப்படி ஒரு கருத்தைக் கூறியுள்ளார் என்பது ரசிகர்களை ஆச்சர்யம் கொள்ள செய்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்